நாம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், உரிமைகளை பெறுவதிலும் சரியான நியாயங்களை கோருவதிலும் பல தடைகள் இன்னும் காணப்படுகின்றன என்பதை நோக்கமாகக் கொண்டே இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினம் கொண்டாடப்படுகிறது. நியாயத்தை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் (UN) ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது . நியாயம் என்பது, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் சமமான அணுகலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.
. "அனைவருக்கும் ஒரே சமூகம்" என்ற அடிப்படையில் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் சமூக நீதியை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டினது அரசாங்கங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை ஊக்குவிக்க வேண்டும். சமூக நீதி என்பது அனைத்து மனித உரிமைகளுக்கும், அடிப்படைகளுக்கு மதிப்பளிக்கும் அடிப்படையில் இருக்க வேண்டும்.
இத்தினமானது வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியமான வேலை, பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சர்வதேச சமூகத்தின் முயற்சிள் ஒருங்கிணைக்கப்பட்ட தினமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும்.