Wednesday, September 4, 2024

காஸா மீதான தாக்குதல் [ Safe Guard - Article 02]



Safe Guard

Phase - 1

Session - 1

காஸா மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை வெளிக்காட்டி நிற்கும் தேசிய இனப்பிரச்சினையாகவும்,பூகோளமயமாதல் தொடர்பான அரசியல்தீர்வற்ற உரிமைமீறல்களாகவும் உலகப்பார்வையில் வலம்வருகின்றன.காஸாவின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் அடக்குமுறை காரணமெனவும்,ஹமாஸ் இயக்கம் காரணமெனவும் பக்கச்சார்புடன் கூடிய சில கருத்துக்கள் தென்படுகின்றன. வடக்கு,கிழக்கே இஸ்ரேல்,தென்மேற்கில் எகிப்து என எல்லைகளைக் கொண்ட நடுநிலக்கீற்றே காஸாவாகும்.கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன் ஒட்டொமன் அம்பயர் காலத்தில் ஆளப்பட்ட காஸா இஸ்லாம், கிறிஸ்தவம்,யூதம் என மூவின மக்களும் ஒன்றாக வாழ்ந்தஇடம்.இதில் யூதம் சிறுபான்மை.1,2 ம் உலகப்போர்களில் அதிகமான யூதர்கள் கொள்ளப்பட்டதால் எஞ்சிய சிறுபாண்மையான அவர்களுக்கு தனி நாடோ,சுதந்திர அரசோ வழங்கப்படவில்லை.எனினும் ஜெருசலத்தில் வசிப்பது அவர்களுக்கு முக்கியமாகியது.வரலாற்றுரீதீயாக இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் என நம்பப்பட்டதால் புனிதமாக கருதுகிறனர்.இதனாலே இவர்கள் ஜெரூசலத்தில் தஞ்சம்புகுந்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள் தற்காலிக புகலிடமாக வழங்கப்பட்ட பகுதியை நிரந்தர நாடாவும்,இஸ்ரேல் என்ற அரசாகவும் அமைத்தனர்.இருப்பினும் பலஸ்தீன மக்களும்,சூழவுள்ள பெரும்பாண்மை முஸ்லிம்களைக் கொண்ட நாடுகளும் இதனை காலப்போக்கில் விரும்பவில்லை.1967ல் இஸ்ரேலால் வெற்றிகொள்ளப்பட்ட இப்பகுதி45% பலஸ்தீன் மற்றும் 55% இஸ்ரேல் எனவேறுபிரிக்கப்பட்டது.பலஸ்தீனை பூர்விகமாக கொண்ட மக்களுக்கு ஆயுதவசதிகள் இல்லாத காரணத்தால்  அன்றிலிருந்து உருவான சண்டைகள் எகிப்து,கட்டார்,ஐ.நா தலையீட்டால் நிறுத்தப்படுவதாக அரசியல் பார்வையில் அமைகிறது.15ம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும் காஸா1967 ல் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது.

காஸா மீதான தாக்குதலில் புனிதத்தலங்களான பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டமையே மூலக்காரணங்களாகும்.இதில் 39800 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.907kg கொண்ட 3குண்டுகள் போடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாகவே ஆகஸ்ட் முக்ராபி பள்ளிவாயல் தாக்குதலில் 15 பேரும்,ஹமாமா தாக்குதலில் 17 பேரும்,காஸாவின் பள்ளிவாயலில் 30 பேர் என மொத்தமாக 4 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன.இது இஸ்ரேல் திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றாகும்.இதற்கு முன் 1996ல் இஸ்ரேல் மீது விமானமூலமாக ஹமாஸ் நடத்திய தற்கொலைத்தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட இஸ்ரேலர்கள் கொல்லப்பட்டமையே,தாம் காஸாவைத்தாக்க காரணமென இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.இதற்காகவே காஸாமீது தாக்குதல் நடத்தப்பட்டது.அத்தோடு,காஸாவுக்கு சார்பான முறையில் கருத்துவெளியிட்ட யமன்,லெபனான் நாடுகளைக் கூட குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.1995ல் ஹமாஸின் யாயா அயாஷை கூட இஸ்ரேல் கொன்றதாக கூறப்பட்டது.காஸா விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட ஒஸ்லோ உடன்பாட்டில் ஏற்பட்ட தோல்வியால் இரண்டாவது ஹமாஸின் எழுச்சியும் உருவானது.அமெரிக்காவைத்தளமாகக் கொண்ட Human Rights Watch அமைப்பு இஸ்ரேலை அப்பாவி மக்களைக் குறிவைத்துத்தாக்கும் ஒன்றாகப்பார்க்கிறது.

இதற்கிடையில் எல்லைப்பகுதியில் 49 கூடாரங்களை அமைத்து,63000க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்காக ஐ.நா.விடம் அனுமதி கோரியதாகவும்,அதனைத்தொட்ர்ந்து காஸாவின் அண்டைப்பகுதியான ஷியையாவில் இஸ்ரேலிய குண்டு பீரங்கித் தாக்குதலால் 62பேர் இறந்ததோடு,300 பேர் காயப்பட்டனர்.எனவும்,பலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு UNRWA குறிப்பிடுகிறது.

காஸாவின் தாக்குதலை இனப்பிரச்சினையாகவும்,அரசியல் மோதலாகவும் பார்க்கும் பார்வைக்கு அப்பால் சமூகப்பார்வை கொண்டு எகிப்திய அதிபர் கூறுகையில் பொதுமக்களை எகிப்துக்கு தஞ்சம் புகச் செய்யும் முயற்சி என்கிறார்.அதுமட்டுமல்ல,காஸாவில் வசிக்கும்பகுதியிலிருந்து வெளியாகும் கழிவுநீரைப் பரிசோதித்தலில் போலியோவைரசு கண்டுபிடிக்கப்பட்டது.அப்பகுதியிலிருந்து 14000 பேர் வெளியேற்றப்படவேண்டுமென ஐ.நா குறிப்பிட்டிருந்தது.இப்பகுதியில் 90% குடிநீர்த்தேவை கூட பூர்த்தியாக்கப்பட்டிருக்கவில்லை.எனவே,சுகாதாரசீர்கேடான நிலைமை ஊடாக தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறியப்படும் மக்களைவிட தொற்றுக்களால் இறந்தமக்களே அதிகமாகும் என்பது தெளிவாகிறது.காஸாத்தாக்குதலால் மக்களின் சுகாதாரம் மட்டுமல்ல சூழலியல் தரமிழப்புக்களும் எற்பட்டது என்றால் ஏற்கத்தக்கது.இதற்கு எடுத்துக்காட்டக உள்ள விடயம் இஸ்ரேலிய இராணுவங்கள்  மூலம் பிலிக்ஸ் குண்டு வீசுவதையும்,அதனை அவர்கள் நியாயப்படுத்துவதையும் குறிப்பிடலாம்.

அப்போதிருந்து இஸ்ரேல்,எகிப்து ஆகியவை பாதுகாப்புக்காக காஸாவிற்கு உள்ளேயும்,வெளியேயும் மக்களுக்கு பொருட்கள் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.சுமார் 22 இலட்சம் வசிக்கும் காஸா மக்களுக்கு தேவையான அத்தி யவசியப்பொருட்களை இஸ்ரேல் முற்றிலுமாக துண்டித்துள்ளது.ஹமாஸ்ஆயுதக்குழு இஸ்ரேல் மீது பல்வேறு ராக்கெட்டுகளை ஏவியும்,பிற ஆயுதக்குழுக்களை சுடஅனுமதித்தும்,பல்வேறு தாக்குதல்களை நடத்தியுமுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறன.2007 வன்முறைக்குப்பின் அப்போதைய ஆளும் பலஸ்தீன ஆணையப்படைகளை  வெளியேற்றிய இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் காஸவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.ஹமாஸ் ஆயுதக்குழுவை ஒரு பயங்கரவாதக்குழுவென அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம்,பிரிட்டன் உட்பட நாடுகள் அறிவித்துள்ளன.ஹமாஸ் ஆயுதக்குழு காஸாவில் அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து இஸ்ரேலுடன் பலபோர்களை நடத்தியுள்ளன.

அரசியல் மற்றும் பொருளாதாரத்தடைகளை இஸ்ரேலும்,ஏனைய நாடுகளும் விதித்துள்ளன.இதற்கு ஹமாஸ் இயக்கம் தாக்குதலை நடத்த பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை பயன்படுத்தியது.கிழக்கு காஸாவின் ஒருபகுதி பலஸ்தீன மக்களில் அகதிகளாக்கப்பட்ட சிலரின் புகலிடமாக பள்ளிவாயல் இருந்ததனால் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலால் மதவழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.இது மத சுதந்திரத்தை பறிக்கும் ஒன்றாகப்பார்க்கப்பட்டது.

எனவே, காஸாத் தாக்குதல் என்பது அன்றிலிருந்த் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கும் உலகலாவிய ரீதியில் தீர்க்கப்படாத ஒரு மோதலாகவும்,சிக்கல்த்தன்மை கொண்ட புரிந்துணர்வற்ற மனிதசெயற்பாடாகவும் தொடர்ந்துக் கொண்டெ இருக்கிறது இது நிதர்சனமான உண்மை என்பதை மறுக்கமுடியாது.


Leo Fathima Sasna

අවදානමට සූදානමක්.

  කොළඹ විෂ්වවිද්‍යාලයීය ශාස්ත්‍ර පීඨ Leo සමාජය යටතේ ක්‍රියාත්මක අවදානම ට සූදානමක් නම් වූ ව්‍යාපෘතිය මේ වන විට අදියර 3 ක් යටතේ ඉදිරියට ඇවිත් ...