Monday, September 16, 2024

சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்திய பெடற்றோலிய எண்ணெய்க் கசிவு [ Safe Guard - Article 12 ]


Safe Guard

Phase - 1

Session - 1


சுற்றுச்சூழல் பேரழிவுகளில் மிக மோசமான அழிவொன்றை 2010ல் உலகம் எதிர்நோக்கியது. இப் பேரழிவானது, நிகழ்கால உலகத்துக்கு மட்டுமல்லாமல் எதிர்கால உலக நிலைப்பாட்டையும் கூட கேள்விக்குறியாக்கிய ஒரு பாரிய நிகழ்வாகும். இந்நிகழ்வானது, பிரிடிஷ் பெற்றோலிய எண்ணெய்க் கசிவு என்று அறியப்படுகின்றது. இவ்வாறு சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவானது சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் நிலைகுலைய செய்தது என்றாலும் தவறில்லை. இப் பேரழிவு தொடர்பாக நோக்கும்போது, இப் பெற்றோலிய எண்ணெய் கசிவானது ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி 2010 இல் லூசியான கடற்கரையில் இருந்து சுமார் 41 மைல் தொலைவில் மெக்சிகோ வளைகுடாவில் தோண்டப்பட்ட மகோந்தா என்ற ஆய்வு கிணறு வெடிப்பினால் தோற்றம் பெற்றது. இது transocean  என்ற oil-drilling நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனத்தால் குத்தகைக்கு பெற்றுக் கொண்டதுமான எண்ணெய்க் கிணறு ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டுப்பாடின்றி வெளியேறுவதை தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய பாதுகாப்பு சாதனமான தடுப்பு கருவியின் செயலிழப்பால் இப் பேரழிவானது இடம் பெற்றது. இதனை மேலும் ஆய்வு செய்யும் போது தென்படக்கூடிய விடயம் என்னவென்றால் இதே போன்ற இன்னும் ஒரு சம்பவமும் 2008ல் கஸ்பியன் கடலில் இதே நிறுவனத்தால் தோண்டப்பட்ட கிணற்றிலும் இடம்பெற்றதாகும்.

இப்பேரழிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் வழிவகுத்தன.கிணறு வடிவமைக்கப்பட்டதில் காணப்பட்ட தவறுகள் 

இயந்திர தோல்விகள் 

மனித தவறுகள் (முறையற்ற நிர்வாக செயற்பாடுகள்) 

இவ்வாறான காரணங்களால் மகோந்தா கிணறு கட்டுப்பாடின்றி எண்ணெய் மற்றும் எரிவாயுவை வெளியேற்ற தொடங்கியது. இரண்டு நாட்களில் மூழ்கவும் செய்தது. தொடர்ந்து ஜூலை 17 2019 அன்று கிணறு மூடப்படும் வரை 87 நாட்களாக தொடர்ந்து எண்ணெய் கசிவு இடம் பெற்றது. இவ்வாறாக நடைபெற்ற எண்ணெய் கசிவானது 4.9 பில்லியன் பீப்பாய்களை கடலில் சேர்த்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோலிய எண்ணெய் கசிவானது பல துறைகளில் பல்வேறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்திய ஒன்றாக காணப்படுகின்றது. இப்பேரழிவு வளைகுடாவில் வசித்தவர்களில் வாழ்வியல் முறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மீன்பிடி, சுற்றுலா கைத்தொழில் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் தனது ஜீவனோ பயத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் ரசாயன கலப்புகளின் காரணமாக சுவாச பிரச்சனைகள் தோல் நோய்கள் உள்ளிட்ட சுகாதார பிரச்சனைகளும் உருவாகின. மேலும், வேளையில் ஈடுபட்டிருந்த 17 ஊழியர்களை பேரழிவானது காயப்படுத்தியதோடு 11 ஊழியர்களின் உயிரையும் காவு கொண்டது. வெடிப்பினால் வெளியேற்றப்பட்ட எண்ணெயை உட்கொண்டதால் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. 

இவ் வெண்ணெய் கசிவின் பிரதான பாதிப்பே சுற்றுச்சூழல் தாக்கமாகும்.இக்கசிவின் காரணமாக அதிகமான கடல் வாழ் விலங்குகள் அழிவுக்கு உள்ளாகின. மட்டுமல்லாமல் பவள பாறைகள் சதுப்பு நிலங்கள் போன்றவற்றையும் இது பாதிப்புக்கு உள்ளாக்கியதோடு ஒரு தசாப்த காலத்துக்கு பின்னாலும் இவ்வழிவின் தாக்கம் காணப்பட்டன. இவ்வாறு எண்ணெய்க் கசவினால் மாசுபடுத்தப்பட்ட கரையோரங்கள் 1100 மைல் என மதிப்பிடப்பட்டுள்ளது. தாவரங்களுடன் இணைக்கப்பட்டிருந்ததால் கரையோர தாவரங்களையும் பெரிதும் பேரழிவு பாதிப்புக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் இது அலபாமா, புளோரிடா,மிசிசிப்பி கடற்கரைகளில் நிலச்சரிவையும் ஏற்படுத்தின. சுமார் 800000 மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டதோடு பாலூட்டிகள் கடல் ஆமைகள் போன்ற பல விலங்கினங்களும் அளிக்கப்பட்டன. இத்தோடு சில பல சமூக பிரச்சினைகளையும் இவ்வெண்ணெய் கசிவு ஏற்படுத்தியது. கடல் தொழில்கள் சுற்றுலா கைத்தொழில் போன்றன இழக்கப்பட்டதால் பல குடும்பங்கள் நிதி கஷ்டங்களுக்கு உள்ளாகினர். சுமார் 8000 முதல் 12000 பேர் தற்காலிகமாக வேலை இழந்ததாக மதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பல பிரச்சினைகள் பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கிணறு மூடப்படுவதற்கு முன்னர் மெக்சிகோ வளைகுடாவில் கசிந்த பெட்ரோலியம் 57,500 சதுர மைலுக்கும் அதிகமான பரப்பளவில் கலந்ததினால் நீரிலிருந்து எண்ணெய்யை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இப்பேரழிவானது, மனித அலட்சியம் மற்றும் நிறுவனங்களின் பேராசை என்பவற்றின் உக்கிரமான  விளைவாக ஏற்பட்ட ஒன்றாகும். இது ஒரு தனிப்பட்ட விடயம் என்றால் இல்லை தடுக்கக்கூடிய தடுக்கப்பட வேண்டிய தொடர்ச்சியான தவறுகளின் விளைவாக ஏற்பட்டது. எவ்வாறு இருந்தாலும் கிணற்றை மூடுவதில் ஈடுபாடு இருந்த போதிலும் சுற்றுச்சூழல் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் போதுமான ஈடுபாடு காட்டப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் பெட்ரோலிய  எண்ணெய் கசிவு பேரழி ஒன்றாக தென்படுவதோடு அதன் தாக்கங்கள் இன்று வரையும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது சுற்றுச்சூழல் பாதிப்பை புறக்கணிப்பதன் கணிசமான விளைவை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஒரு விடயம் ஆகும். அத்தோடு இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தையும் நினைவூட்டி நிற்கின்றது. மேலும் நிறுவனங்களை பொறுப்பு கூற வைப்பது மட்டும் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவது மற்றும் தூய்மையான பாதுகாப்பான எரிசக்தி மாற்றுகளில் முதலீடு செய்வது போன்றவற்றை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதை சுட்டி நிற்கின்றது. அவ்வாறு முழு உலகமும் ஒன்றுபட்டு செயல்படும்போது இவ்வாறான மற்றுமொரு அழிவு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Leo Zynab  Amani

👻 Happy Halloween

👻 Happy Halloween 👻 👻 Happy Halloween Introduction: When the Veil Thins On the evening of October 31st, a palpa...